Equal Justice Equal Rights Protection Association

சமநீதி சமஉரிமைகள் பாதுகாப்பு சங்கம்

Subscribe Us

Ads Here

Tuesday, January 13, 2026


 லஞ்ச ஒழிப்புப்புகார் அளிப்பது எப்படி…?

ஓர் விழிப்புணர்வு அறிக்கை!!!

 

I) ஒவ்வொரு மாவட்டத்தலை நகரிலும் செயல்படும், ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார், (லஞ்சஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்புதுறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கிவரும்  CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள  VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள, ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கி வரும், DVAC என்றழைக்கப்படும் “Directorate of Vigilance and Anti-Corruption” என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும் தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல்பாடுகளையே கண்காணித்து, தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்ககடமைப்பட்டவர்கள்.

 

II) லஞ்ச ஒழிப்புச்சட்டம் –என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசுஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப்போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசுநிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- “PUBLIC SERVANTS” என்ற வரையரறைக்குட்பட்டதால், கடைநிலையில் உள்ள ஒரு வி.எ.ஓ.-வை எப்படி நூறுக்கும், இருநூறுக்கும், அந்தச்சட்டத்தின்கீழ், எளிதில்பொறிவைத்துப்பிடிக்கிறார்களோ, அதேபோல் பொறி வைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் தான்.

 

III) லஞ்சத்தில் நான்கு வகைகள் உண்டு. அவை பின் வருமாறு:

 

1-வது வகையான லஞ்சத்தில் ஈடுபடுபவர்கள் தான் அடிக்கடி “பொறிவைப்பு”நடவடிக்கையில் சிக்குவார்கள். ஏனெனில், இதில் பாதிக்கப்பட்ட நபர் Motivate-ஆகி புகார் அளிக்க தயாராக இருப்பார்.

 

2-வது வகையான லஞ்சம் வொயிட்காலர் (white color) லஞ்சம் எனப்படும். இந்த வகை லஞ்சத்தில் இழப்புக்குண்டாவது அரசாங்கம்தான். இழப்புக்குண்டாகும் அரசுப்பணத்தின் அளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கும்.

எப்போதாவது சிலநேரங்களில் அத்திபூத்தார்போல சிலநேர்மையான அதிகாரிகளின் கண்களில் படும்போது மட்டும் திடீரென வெடித்து பரபரப்பாகும். இந்த வகையான லஞ்சத்தால் எற்படும் பாதிப்பு கேன்ஸர்போன்றது. ஏனெனில், இதன்பாதிப்பு, கண்களுக்கு உடனடியாகத் தெரியாது, ஆனால், நாளடவில் ஏற்படும் பாதிப்பு மரணத்திற்கு ஒப்பானது.

 

 

 

3-வது வகையான லஞ்சத்தில் தான்,

கண்ணுக்கு எதிரேயே தெரியும். கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல்-ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும்பல.

 

4வது வகை லஞ்சம் பொதுமக்களுக்கு அன்றாடத்தொல்லைகள் தரும் வகையைச் சேர்ந்தது.100ரூ பாய்க்கும், 200 ரூபாய்க்கும் லஞ்சத்தில் ஈடுபடும் ஒரு கடைநிலை ஊழியரை தண்டிப்பது பரிதாபத்துக்கு உரியதாகத் தெரிந்தாலும், பொது இடங்களில் அச்செயல் மிகுந்த தொல்லைக்குரியதாகவே தெரியும்  4-வது வகையில் சொல்லப்பட்டுள்ள Petty-Corruption என்பது பிச்சைக்காரர்கள் அதிகார தொனியில், பிச்சைஎடுப்பது போலத்தான்.

 

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையிலும் ,மூன்றுவகைகள் உண்டு.

1) Trap Case. ( பொறிவைத்துப் பிடித்தல் )

2) Regular case எப்படி புகார் அளிப்பது:

இதில், லஞ்சம் கொடுத்தால் தான் வாயையே தொறப்பேன் என்று செயல்படும் சில Corruptive Officials மீது பொறி வைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறிவைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைது செய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல்படுவார்கள்.

பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், ‘நம் அரசு வேலையை முடித்துக்கொடுக்க மாட்டார்களே என்று கவலைப் படவேண்டாம். பொறி வைப்பு நடவடிக்கை முடிந்ததும், அந்த வேலையை செய்து கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசுஉத்தரவிட்டுள்ளது..

 

2, மற்றும் 3-வது வகையான லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்கு, பெரும்பாலும் பொறிவைப்பு நடவடிக்கைகான புகார்கள் வராது. காரணம், இது ஒரு Collusive Corruption. இவற்றை Whistle-Blower கள் தான் வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த வகையான Collusive Natured Corruption- தொடர்பான குற்றங்களுக்கு எதிராக, FIR போடுவதற்கு அடிப்படையாகத் தேவைப்படுகின்ற Detailled Enquiry/ Preliminary Enquiry/ Surprise Check செய்வதற்கு தேவையான தகவல்கள், லஞ்சப்பணம் transaction நடைபேறும் இடம், Illegal Assets பற்றிய செய்திகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தரமற்ற அரசுப்பணிகள் (Sub-standard Works) பற்றிய தகவல்கள், மாமூல் நடைபெறும் விதம், அவை நடைபெறும் இடம் மற்றும் அதில் Collude ஆகியுள்ள Corrupt Officials மற்றும் வாங்கிக்கொடுக்கும் Middle men மற்றும் சமூக விரோதக்குற்றங்கள் செய்யும் Organised Offenders பற்றிய பரங்களை, அனுப்புபவர் பெயர் முகவரி எதுவும் குறிப்பிடாமல், புகாராகவோ அல்லது இமெயில் மூலமகவோ, சென்னையில் இதனடியில் கூறிஉள்ள அதிகாரிகளுக்கு அனுப்பினால் நிச்சயம் அது உரிய நடவடிக்கைகு வரும். ஆனால், இந்தவகையான வழக்குகளில், வழக்கின் தன்மையைப் பொறுத்துத்தான், கைது போன்ற நடவடிக்கைகள் செய்வார்கள். இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப் பேர் வழி காலப்போக்கில் சட்னியாகி விடுவார்.

விஜிலன்ஸ்கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

 

1) Vigilance Commissioner

Personnel and Administrative Reforms Department Secretariat,

Chennai 600 009 PBX No. 044-25665566

Email: parsec@tn.gov.in

 

(2)The Director,

Vigilance and Anti-Corruption,

293,MKN Road, Collectors Nagar,

Alandur,Chennai,Tamil Nadu-600016.

Chennai – 600 028.

Phone-044-22321090/22321085/22310989/

22342142

E-mail: dvac@nic.in

 

மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்பு கார்களை அளிக்கும் பட்சத்தில், மாநில அரசு கட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள். அப் புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள  CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களே உங்கள் இடத்திற்கு, உங்களைத் தேடிவந்து புகாரைப் பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

 

CHENNAI ZONE

Joint Director and Head of Zone,

III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.

044-28232756 (Direct),

044-28272358(General),

044-28232755 (FAX) hozchn[at]cbi[dot]gov[dot]in 09444446240

State of Tamil Nadu, Kerala & Pondicherry.

No comments:

Post a Comment