விழிப்புணர்வு தகவல்கள்:-
1. ரூ. 100/-க்கு மேல் மதிப்பு கொண்ட ஆவணங்கள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
G. D. Subramaniyan Vs The Sub Registrar
(2009-1-CTC-709).
2. ஆவணத்தின் புகைப்பட நகலை சாட்சியமாக (#Evidence) ஏற்றுக் கொள்ள முடியாது.
Ramesh Varma Vs Lajesh Saxena
(AIR-1998-M.P-46)
3. ஒரு ஆவணத்தை நிரூபிக்க அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் அல்லது அவர் உண்மை உறுதி மொழி ஆவணத்தை (#Affidavit) தாக்கல் செய்தல் வேண்டும்.
(Smt) Ram Janaki Vs Shakuntala Devi
(AIR-1983-Del-330).
4. இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 65-ன் கீழ் (#Indian_Evidence_Act) உள்ளடங்கி வந்தாலன்றி, மற்றபடி ஒரு ஆவணத்தை முதனிலை சாட்சியத்தை (Primary Evidence) கொண்டு தான் நிரூபிக்க வேண்டும். இரண்டாம் நிலை சாட்சியத்தை (Secondary Evidence) கொண்டு நிரூபிக்க முடியாது.
Niloba Gunda Madane Vs Rukhminibai Vithalrao Kulkarani
(2003-1-All - MR-1052)
Dayamathibai Vs K. M. Shaffi
(AIR-2004-SC-4082).
5. ஆவணத்தின் உள்ளடக்கத்தை, அனுமதிக்கப்படும் சாட்சியத்தால் நிரூபித்தல் வேண்டும்
Ramji Dayawala & Sons (P) Ltd Vs Invest Import
(AIR-1981-SC-2085)
6. பொதுவாக நீதிமன்றம், பிரச்சினைக்குரிய கையொப்பத்துடன் வழக்கு தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்ட கையொப்பத்தை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 73-ன் கீழ் அவ்வாறு ஒப்பிட்டு பார்ப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற போதிலும், அதில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் ஏற்பட்டால், அதனை கையெழுத்து வல்லுனருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
D. Pandi Vs Dhanalakshmi Bank Ltd
(2001-2-LW-334)
7. ஒரு நபருக்கு கையெழுத்து போடத் தெரியும் போது, அவர் ஒரு ஆவணத்தில் கைரேகை இட்டிருந்தால், அந்த ஆவணமும் செல்லக்கூடியதே ஆகும்.
Gangadhar Vs Gangadhar Das
(AIR-1986-Ori-173).
8. வாய்மொழி கொடையின் மூலம் தந்தையால் மகளுக்கு சீதனம் கொடுக்கப்பட்டது செல்லாது. அது உரிமையை வழங்காது.
(2008-1-MLJ-743).
9. #கொடை மனைவிக்கே கொடுக்கப்பட்டாலும், அது அசையா சொத்து என்றால், அந்த கொடை ஆவணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
(AIR-2001-SC-3468).
.jpg)

No comments:
Post a Comment